பும்ரா இல்லாது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் பெற்றுள்ளனர் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் இந்த அணியில் இடம் பிடித்த கதை உபாதை காரணமாக ஜஸ்பிரித் பும்ரா பின் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை தொடர்ச்சியாக போட்டிகளில் இந்தியாவின் ஆசியக் கிண்ண அணி-கோலி , ராகுல் வாயப்பு..!

பும்ரா இல்லாத இந்தியாவின் ஆசியக் கிண்ண அணி-கோலி , ராகுல் வாயப்பு..!

ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11, 2022 வரை நடைபெறவுள்ள ஆசிய கோப்பை 2022க்கான இந்திய அணியை இந்திய தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

போட்டியின் 15வது பதிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆறு அணிகளுக்கு இடையே விளையாடப்படும். நடப்பு சாம்பியனான இந்தியா 7 முறை கோப்பையை வென்ற அணியாகவும் உள்ளது.

போட்டியின் கடைசி பதிப்பு ஒருநாள் போட்டியாக நடைபெற்ற நிலையில் இந்தியா சாம்பியனானது, இந்த முறை போட்டிகள் டி20 வடிவத்தில் இடம்பெறும்.

ஆறு அணிகள் விளையாடவுள்ளன, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தெரிவுப் போட்டி அணி ஆகியன குழு A யிலும் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குழு B யிலும்  பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் குழு கட்டத்தில் மற்றொன்றுடன் ஒரு முறை விளையாடுகிறது, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 4ல் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர், சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.

உபாதை காரணமாக ஜஸ்பிரித் பும்ரா உபாதை காரணமாக அணியில் வாய்ப்பு பெறவில்லை, தொடர்ச்சியாக T20 போட்டிகளில் சாதித்துவரும் ஷிரேயாஸ் ஐயர், சாம்சன், இஷான் கிஷான் ஆகியோர் மேலதிக வீரர்களாகவே அணியில் இடம்பெற்றுள்ளார்.

அணி: ரோஹித் சர்மா (C), கேஎல் ராகுல் (VC), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் அவேஷ் கான்

மேலதிக வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர் மற்றும் அக்சர் படேல்

 

பாகிஸ்தான் அணி விபரம் ?

YouTube காணொளிக்கு ?