அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரமான 39 வயதாகும் செரினா வில்லியம்ஸ், அண்மையில் இடம்பெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவி வெளியேறினார் .
செரினா வில்லியம்ஸ்க்கு 3 வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கிறது, மகளது பிரசவத்திற்கு பின்னர், செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் களத்தில் கிராண்ட்ஸ்லாம் மகுடங்கள் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் தடுமாறுகின்றமை குறிப்பிடத்தக்கது .
ஆனாலும், புலிக்குப் பிறந்தது பூனையாகுமா எனும் கேள்விக்கமைய ஒலிம்பியா எனும் அவரது சுட்டிக்குழந்தை டென்னிஸ் களத்தில் தாயாரோடு போட்டியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கின்றன .
ஒலிம்பியாவிற்கு வாழ்த்துகள் .
எதிர்காலத்தில் ஒரு தரமான டென்னிஸ் வீராங்கனை கிடைக்க வாழ்த்துவோம்.