இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா- பென் ஸ்டொக்ஸ் தலைமையில் புதிய அணி அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஏழு உறுப்பினர்கள் – மூன்று கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நான்கு பயிற்சியாளர் குழுவினர் செவ்வாயன்று கொரோன தொற்றுக்கு உள்ளானதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் கால அட்டவணையின்படி தொடரும் என்பதை ECB உறுதிப்படுத்தியது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை 8 ஆம் தேதி கார்டிஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட இங்கிலாந்து அரசாங்கத்தின் நெறிமுறையைப் பின்பற்றி ஜூலை 4 முதல் சுயதனிமைப்படுத்தப்பட்ட நடைமுறையில் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடரவுள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் அணியின் தலைவராக தொடர்வார் என்றும் புதிய அணியொன்று பாகிஸ்தானை சந்திக்கும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது.
அதன்படி புதிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது, 9 புதுமுக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டோக்ஸ் (தலைவர் )
ஜாக் பால்
டேனி பிரிக்ஸ்
பிரிடோன் சார்ஸ்
சாக் கிரேவ்லி
பென் டக்கெட்
லீவிஸ் கிரிகோரி
டாம் ஹெல்ம்
வில் ஜாக்ஸ்
டான் லாரன்ஸ்
சாகிப் மஹ்மூத்
டேவிட் மாலன்
கிரேக் ஓவெர்ட்டன்
மாட் பார்கின்சன்
டேவிட் பயன்
பில் சால்ட்
ஜான் சிம்ப்சன்
ஜேம்ஸ் வின்ஸ்
இங்கிலாந்துடனான தொடரில் விளையாடிய குசல் பெரேரா தலைமையிலான இலங்கை அணியினரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால், இலங்கை கிரிக்கெட்டும் வேறொரு அணியையும் தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம் என்றே கருதப்படுகின்றது.