பெரும் தொகை கடனில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் கழகங்கள்
பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் கழகங்கள் தற்சமயம் கடனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்சிலோனா 1.12 பில்லியன் யூரோ மற்றும் ரியல் மாட்ரிட் 900 மில்லியன் யூரோ கடன் தொகையில் இயங்குவதாக தெரிவிக்கபடுகிறது.
எனினும் ரியல் மாட்ரிட் அணியின் கடன் நீண்ட கால கடன் எனவும் அவ் அணியின் மைதான புனரமைப்பு சம்மந்தமானது என அறிய முடிகிறது. ஆனால் பார்சிலோனா அணியின் கடன் குறுங் கால கடன் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது. பார்சிலோனா அணி சமீப காலமாக வீரர்கள் மாற்றம் செய்யும் டிரான்ஸ்பர் முறையில் அதிக தொகை செலுத்தி வீரர்களை வாங்குவதும் அவ் வீரர்கள் சோபிக்க தவறுவதும் வழமை ஆகியுள்ளது.
பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் கழகங்கள் ஸ்பெயின் இன் இரு முக்கிய கழகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் இரு பிரபல்ய அணிகளின் பொருளாதார நிலை இக் Covid-19 காலத்தில் மற்றைய அணிகளின் பொருளாதாரத்திலும் செல்வாக்கு செலுத்தும் என்பது நிதர்சனம்.