வெஸ்ட் இண்டீஸ் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கேப்டன் கீரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக விளையாடிவரும் பொல்லார்ட், சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுக்கும் திடீர் முடிவை எடுத்துள்ளார்.
ஆயினும் ஐபிஎல் போன்ற T20 ஆட்டங்களில் விளையாடுவார் என அறியவருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் பொல்லார்ட், இம்முறை மிகப்பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார் .
ஆயினும் பொல்லார்ட் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுக்கும் தீர்மானம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியை உருவாக்கி உள்ளது.
34 வயதான பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 123 ஒருநாள் போட்டிகள் மற்றும் 101 T20 போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார், மேலும் 2012 உலக T20 ஐ வென்ற அணியின் ஒரு பகுதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.