போராடி தோற்றது இலங்கை அணி -தொடர் மேற்கிந்திய தீவுகள் வசம் .

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இறுதிவரைக்கும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 273 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது .

சந்திமால் ,குணத்திலக்க ஆகியோர் அற்புதமான அரைச்சதம் விளாசினார்.

274 எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்ப வீர்ர்கள் ஒரு அபாரமான சாதனை புரிந்தனர்.

கடந்த போட்டியில் ஷாய் ஹோப் சதம் அடித்த நிலையில், இந்த போட்டியில் இன்னுமொரு ஆரம்ப இதன் லூயிஸ் சதமடித்தார். இந்த நிலையில் இறுதி இரண்டு ஓவர்களில் 13 ஓட்டங்கள் தேவை என்கின்ற நிலைமை உருவானது .

49வது ஓவரை வீசிய துஷ்மந்த சமீர அந்த ஓவரில்  நான்கு ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார், இதன் அடிப்படையில் இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவை என்கிற நிலைமை உருவானது.

 நுவான் பிரதீப் வீசிய இறுதி ஓவரின் முதல் பந்து வீச்சில் ஓட்டம் எதுவும் பெறப்படாவிட்டாலும் அடுத்த இரண்டு பந்துகளில் 2 பவுண்டரி விளாசி நிக்கோலஸ் பூரன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என வென்றது.

இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்களை துரத்தி அடித்து வெற்றி பெற்ற வரலாற்று சாதனையையும் மேற்கிந்திய தீவுகள் இன்று படைத்தது .

ஆட்டநாயகன் விருது சதமடித்த லூயிஸ்க்கு கிடைத்தது, ஆனாலும் இறுதிவரைக்கும் போராடிய இலங்கை அணியை பாராட்டலாம்.