பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தப் போட்டியில் குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதில் இன்னிங்சை விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 எடுத்தது. மஹ்முதுல்லா 54 , ஜாகர் அலி 68 பெற்றனர்.
அஞ்சலோ மெத்தியூஸ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், தசுன் ஷனக 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பினுர பெர்னாண்டோ 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.