மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது.

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டியில் அஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகள் உள்ளன.

இன்று நடந்த 26-வது ‘லீக்’ ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் குவித்தது.

தொடக்க வீராங்கனை சுசிபேட்ஸ் 126 ஓட்டங்களை எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நிதா தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

266 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 194 ஓட்டங்களில் 9 விக்கெட் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஹன்னா ரோவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.