மக்கலத்தின் பயிற்றுவிப்பில் மறுபிரவேசம் பெற்ற இங்கிலாந்து – 3 வது டெஸ்டிலும் வெற்றியின் விளிம்பில்..!

மக்கலத்தின் பயிற்றுவிப்பில் மறுபிரவேசம் பெற்ற இங்கிலாந்து – 3 வது டெஸ்டிலும் வெற்றியின் விளிம்பில்..!

போப் (81*) மற்றும் ரூட் (55*) ஆகியோருக்கு இடையேயான ஒரு சத பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணியை பலமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

நியூசிலாந்து அணியுடனான தொடரை 3-0 என ஸ்வீப் செய்ய கடைசி நாளில் 113 ரன்கள் தேவை.

296 எனும் வெற்றி இலக்குடன் துடுப்பாடும் இங்கிலாந்து அணி இன்னும் 113 ரன்கள் எடுத்தால் இந்தப் போட்டியிலும் வெற்றி என்ற நிலையில் போட்டி ஐந்தாம் நாள் நோக்கி இட்டுச் செல்லப்படுகிறது.

ஏற்கனவே முதல் இரண்டு ஆட்டங்களில் மிக அற்புதமான வெற்றியை தனதாக்கிய இங்கிலாந்து, இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என தொடரை முடிக்க முனைகின்றமை குறிப்பிடத்தக்கது.

|#ENGvNZ