மத்தியூஸ் ஓய்வு முடிவு – அரவிந்த விளக்கம்..!
இலங்கை கிரிக்கெட் தற்போது பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் திடீரென மத்தியூசும் ஓய்வுபெறும் முனைப்பில் இருக்கிறார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அணித்தலைவரும் தொழில்நுட்ப குழுவின் தலைவரிமான அரவிந்த டீ சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
“இந்த நேரத்தில் மத்தியூஸ் வெளியேறினால், அது மிகவும் கடினமான நேரமாக இருக்கும். இலங்கை கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய தியாகங்களையும் சேவையையும் நான் பார்த்திருக்கிறேன்.
இந்த காரணங்களுக்காக, அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நான் விரும்பவில்லை. கிரிக்கெட் மற்றும் ஒப்பந்த பிரச்சினைகள் காரணமாக அது நடப்பதை நான் பார்க்க விரும்பவில்லை என அரவிந்த தெரிவித்துள்ளார்.
“இலங்கை வீரர்கள் தங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி எந்த விளையாட்டிலும் நம்பிக்கையை வளர்ப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். நம்பிக்கைகள் இந்த நிலைமையை மாற்றும். நாம் செய்ய வேண்டியது வெற்றி, நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் உலகக் கிண்ணத்தை நோக்கி நகர்வது மட்டுமே எனவும் அரவிந்த தெரிவித்தார்.