மத்தியூஸ் தொடர்பில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

? ஏஞ்சலோ மேத்யூஸ் பற்றிய பிந்திய செய்தி..!

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் குணமடைந்து 2-வது டெஸ்ட் போட்டிக்கான தேர்வுக்கு வருவார் என ஶ்ரீலங்கா கிரக்கெட் அறிவித்துள்ளது.

விளையாட்டில் ஈடுபட மத்தியூஸுக்கு மருத்துவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மத்தியூஸ் மீண்டும் அணியில் இணைவார் என தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த வேளையில் மத்தியூஸிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதன் காரணத்தால் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய மேத்யூஸ் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, இரண்டாவது இன்னிங்சில் அதன் காரணத்தால் அவருக்கு பதிலாக நேரடியாக ஒஷாத பெர்னான்டோ அணியில் இணைந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

#SLvAUS

 

 

Previous articleடெஸ்ட் அறிமுகத்திற்காக காத்திருக்கும் ஜப்னா கிங்ஸ் இளம் வீரர்கள் இருவர்..!
Next articleஷாருக் கானின் நைட் ரைடர்ஸ் அணியில் இணையும் தீக்க்ஷன..!