மந்தனாவின் அதிரடியில் அபார வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி..!

சுற்றுலா இந்திய மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெறுவது இலங்கை அணிக்கு இன்றியமையாததாக இருந்தது, ஏனெனில் இது தொடரை சமன் செய்ய சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

Toss வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அழைப்பின் பேரில் களம் இறங்கிய இலங்கை மகளிர் அணியின் முதல் 3 விக்கெட்டுகளையும் இந்திய வீராங்கனைகள் 11 ரன்களில் வீழ்த்தினர். பின்னர் சாமரி அத்தபத்து, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷி சில்வா ஆகியோர் முறையே 25, 27 மற்றும் 32 ரன்கள் பெற்று இலங்கையின் ஸ்கோர்போர்டை மெதுவாக உயர்த்தினர்.

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணியின் அனைத்து வீராங்கனைகளும் 173 ரன்களுக்கு மட்டுப்படுத்த இந்திய வீராங்கனைகளும் அக்கறை காட்டினார்கள். இலங்கை இன்னிங்ஸின் அதிகபட்ச ஸ்கோராக களமிறங்கிய அம காஞ்சனா ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஜோடி வெற்றியைத் தேடித் தந்தது. இருவரும் இணைந்து சிறப்பான இன்னிங்ஸை ஆடி போட்டியை எளிதாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

ஸ்மிருதி மந்தனா 83 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 91 ரன்களும், ஷபாலி வர்மா 71 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 71 ரன்களும் எடுத்தனர். இதன்படி, இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் இந்திய மகளிர் அணி போட்டியை கைப்பற்றியது.

 

 

Previous articleபிரெண்டன் மெக்கல்லம் கொடுத்த ஷார்ட்-பால் சிக்னல், ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை திட்டமிட்டு வீழ்த்திய வீடியோ..!
Next articleLPL ஏலத்துக்கு முன்னதாகவே வெல்லாலகேவை வளைத்துப்போட்ட பிரபல அணி..!