மரண பயம் காட்டும் இங்கிலாந்து- மானம் காக்க போராடும் சென்னைத் தமிழர்கள் …!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஆட்டம் விடை நிறுத்தப்படும் வரை இந்தியா 6 விக்கட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுள்ளது .
இன்றைய 3 ம் நாள் ஆட்டத்தில் காலை போட்டியைத் தொடர்ந்த இங்கிலாந்து 578 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை முடித்துக் கொண்டது .
இந்தியா சார்பில் முதல் இன்னிங்ஸ்சில் ஆரம்ப வீரர்கள் ரோகித் சர்மா ,கில் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் பொறுப்போடு ஆட வேண்டிய நிலையில் ஆட்டத்தை தொடர்ந்து கோலி மற்றும் ரஹானே ஆகியோரும் விரைவாகவே வீழ்த்தப்பட்ட நிலையில் இந்தியா ஒரு கட்டத்தில 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை என்கின்ற தடுமாற்றமான நிலையில் இருந்தது .
ஆயினும் விக்கட் காப்பாளர் ரிஷாப் பாண்ட் 91 ஓட்டங்களையும் புஜாரா நிதானமாக 73 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க இந்தியா இன்றைய நாள் நிறைவில் 257 ஓட்டங்களை பெற்றுள்ளது .
6 விக்கெட்டுகள் பறிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து தொடர்ச்சியாக சென்னை டெஸ்டில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்ற நிலையில் இந்தியாவின் மானம்காக்க சென்னையின் மைந்தர்களான வோசிங்டன் சுந்தர் மற்றும் அஷ்வின் ஆகியோர் கடுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளஅன்ரன். இங்கிலாந்து அணியின் 578 ஓட்டங்களை இன்னும் 321 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருக்கிறது.
சென்னை மைந்தர்களான வாஷிங்டன் சந்தர் 33 ஓட்டங்களிலும், அஸ்வின் 8 ஓட்டங்களிலும் களத்தில் உள்ளனர். Follow On தவிர்க்க இந்திய அணிக்கு 122 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
ஆனால் சுந்தர், அஸ்வின் இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலே அடுத்து களத்தில் நிலைத்து நிற்க நம்பகமான ஆட்டக்கார்ர்கள் எவரும் இல்லை என்பதால் பலத்த நெருக்கடியான கட்டத்தில் இந்திய அணி இருக்கிறது.
இன்னும் இருநாட்கள் 6 செஷன்கள் இருக்கின்றன. ஆடுகளம் இனிமேல் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணி நாளை விக்கெட் வீழாமல் தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகம்தான். எதுஎவ்வாறாயினும் ஆரம்ப நாள் முதலே இங்கிலாந்து போட்டியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதே உண்மையானது.