மறக்க முடியாத ஆட்டங்கள்
வேகப் பந்தால் ஒரு வெறித்தனம்
புத்தி தெரிந்த வயதிலிருந்து என் வானாளில் இது வரை ஆயிரக்கணக்கான கிரிக்கெட் மேட்ச்சுகளை பார்த்திருக்கின்றேன். எல்லா மெட்ச்சகளும் ஒரே போல மனதில் நின்று விடுவதில்லை. அதே நேரம் சில மேட்ச்சுகள் தசாப்தங்கள் தாண்டினாலும் கடைசி மூச்சு இருக்கம் வரை கல்புக்குள்ளேயே கிடக்கும். மரணப் படுக்கையிலும் மறக்க முடியாத வைரமுத்துவின் இருவர் கவிதையது. அப்படியொரு ஆட்டத்தைப் பற்றிய கட்டுரைதான் இது.
இப்போதிருக்கின்ற டீ டுவன்டி இன்ஸ்டா பரம்பரையினருக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியைப்பார்த்தால் சொதப்பல் சோப்புளாங்கிகளாத்தான் தெரியும். இவனுக என்ன ஆடுறானுகள் என்று ஷபா முடியல்ல மோடில் வாரத்தைகள் வந்த விழும். சில நேரம் வஅர்களிக் டெஸ்ட் ஆட்டத்தை பார்த்தால் “நான் ஆழுதுறுவேன்” லெவலில் இருக்கும். டெஸ்ட் ஆட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆட்டம் பல நேரங்களில் அவர்களை சிம்பாபே மற்றும் கென்யா போன்ற கத்துக் குட்டி அணிகளுக்கு அருகே கொண்டு செல்லும். ஆனால் ஒரு காலத்தில் அவர்கள் எப்படியிருந்தார்கள் என்று ரீவைன்ட் பண்ணிப் பார்த்தால் ஒரே வார்த்தையில் எதிரணிக்கு வயிற்றால் போகின்ற லெவலில் சம்பவம் செய்கின்றவர்களாக இருந்தார்க்ள. கிரிக்கடட் உலகின் அலெக்சான்டர்களாக ஹிட்லர்களாக இருந்தார்க்ள ஒரு காலத்தில் அவர்கள்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி என்றால் எதிரணிக்கு ஓவர் நைட்டில் ஒன்னுக்குப் போய் விடும். அசைக்க முடியாத இடத்தில் அவர்கள் ஒரு காலத்தில இருந்தார்கள். அற்புதமான துடுப்பாட்டக்காரர்கள் ஒரு புறம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க மறு புறத்தில அட்டகாசமான பந்து வீச்சாளர்கள் எதிரணியின் துடப்பாட்டர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள்ள.
1996/1997 பருவ காலத்தில் இநதிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஐந்து டெஸ்ட்கள் கொண்ட தொடருக்காக சுற்றுப் பயணம் செய்திருந்தது. இந்த சுற்றுப் பயணத்தில்தான் ப்ரையன் லாரா கேப்டனாக தனது முதலாவது தொடரை ஆரம்பித்தார். இந்திய அணிக்கு சச்சின் கேப்டன். இந்த தொடரின் மொத்த ஐந்து ஆட்டங்களில் இந்தியாவுக்கும் சரி மேற்கிந்தியத் தீவுகளுக்கும் சரி என்றைக்கு மறக்க முடியாத படி அமைந்தது மூன்றாவத டெஸ்ட். ஏனைய டெஸ்ட் போட்டிகள் வெற்றி தோல்வியின்றி ட்ராவில் முடிய மூன்றாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளின் வேகப் பந்து வீச்சாளர்கள் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசையை ஆட்டத்தின் ஐந்தாம் நாளில் செய்ததெல்லாம் வதம் தவிர வேறென்ன.
கிரிக்கெட் உயிரேடிருக்கின்ற காலமெல்லாம் இந்திய அணி என்றைக்குமே அந்த மூன்றாவது டெஸ்டில் பட்ட மரண வலியை மறக்கவே மறக்காது என்பதனை எந்த இடத்தில் வந்தும் சத்தியம் செய்து தர நான் தயாராக இருக்கின்றேன். இந்த டெஸ்டில் இந்தியாவின் கேப்டனாக கடமையாற்றிய சச்சினுக்கு இதனை நிச்சயமாக மறக்கவே மறக்க முடியாது. இந்தியாவின் படு தோல்வியோடு கிரிக்கெட் வாழ்க்கைக்கு இத்தோடு முற்றுப் புள்ளி வைத்து விடலாமா என்று யோசிக்கின் றஅளவுக்கு விரக்தியின் உச்சக் கட்டத்தில் சச்சின் விடிய விடிய உறங்காமல் விழித்திருந்தார் என்பது வேறு கதை.
பொதுவாக மேற்கிந்தியாவின் மல்கம் மார்ஷல் தொட்டு கெட்லி அமப்ரூஸ், மைக்கல் ஹோல்டிங், கொட்னி வோல்ஸ், இயன் பிஷப், ரோஸ் கொலின் க்ரொப்ட், ஆன்டர்சன் ரொபேர்ட்ஸ் சார்லி கிரபித் என நீண்டு செல்லுகின்ற பயங்கரமான வேகப் பந்து வீச்சாளர்களை ஏனைய எல்லா எதிரணிகளும் களத்தில் கண்டு மிரண்டிருக்கின்றன என்பதுதான் வரலாறு. அவர்களெல்லாம் கிரிக்கெட் உலகை ஒரு காலத்தில் அட்டகாசமாக ஆட்டிப் படைத்தவர்கள்.
நான் மேற் குறிப்பிட்ட ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது டெஸ்ட் 1997ம் ஆண்டு மார்ச் மாதம் 27 தொடக்கம் 31 வரை மேற்கிந்தியத் தீவுகளின் பிரிட்ஜ் டவுனில் இடம் பெற்றது. முதல் இன்னிங்சில் முதலில் துடுப்படுத்தாடிய மேற்கிந்திய அணி 298 ஓடடங்களை பெற்ற அதே வேளை முதல் இன்னிங்சுக்காக இந்திய அணி 319 ஓட்டங்களை பெற்று மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட ஓடடங்களில் முன்னணி வகித்தது. இரண்டாம் இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய அணி பெற்ற மொத்த ஓட்டங்களே 140 மாத்திரம்தான். இப்போது இந்திய அணி வெற்றி பெறுவதற்காக பெற வேண்டிய ஓடடங்கள் வெறுமனே 120 மாத்திரம்தான்.
ஜஸ்ட் 120 ஓட்டங்கள்தானே. இந்தியாவின் ஓப்பனிங் வீரர்கள் அசால்ட்டாக அடித்து முடித்து பெவிலியன் திரும்புவார்கள் பாருங்களேன் என்றுதான் எல்லாரும் நினைத்திருந்தார்கள். அப்படித்தான் நான் கூட அப்போது நினைத்திருந்தேன். இந்திய அணியில் நவ்ஜோத்சிங் சித்து, வீவீஎஸ் லக்ஷ்மன், ராகுல் ட்ராவிட், சச்சின் டென்டுல்கர் சவ்ரவ் கங்கூலி முகம்மது அசாருத்தீன் மற்றும் நயன் மொங்கியா என்று ஒரு கொங்க்ரிட் துடுப்பாட்ட வரிசையே கல்லா கட்டிக் கொண்டிருந்தது. இந்தியா ஈஸியாக வெற்றி இந்த ஆட்டத்தை வெற்றி கொள்ளும் என்று வர்ணனையாளர்கள் கூட கொமன்டிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நிஜத்தில் நடந்தது..நடந்தது….வேறு……கிரிக்கெட் ஒரு மெஜிக்கல் கேம்..எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனை நிரூபித்துக் காட்டியது இந்த மூன்றாவது டெஸ்டின் முடிவு. முதலாவது இன்னிங்சில் அற்புதமாக ஆடிய இந்திய துடுப்பாட்ட வரிசை களத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தது. மொத்தமாக அவர்களால் 35.5 ஓவர்களை மாத்திரமே எதிர் கொண்டு விளையாட முடிந்தது,
இந்திய அணியை மேற்கிந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் 81 ஓட்டங்களுக்குள்ளே அப்படியே ஒரு நத்தையபப் போல சுருட்டி பெவிலியனுக்கு பெக் செய்து அனுப்பியிருந்தார்கள். வீவீஎஸ் லக்ஷ்மன் மட்டுமே 19 ஓட்டங்களை பெற்றார். ஏனைய எல்லா பெட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் பரிதாபமாக திரும்பிச் சென்றார்கள். மேற்கிந்தியத் தீவுகளின் கெர்ட்லி அம்ப்ரூஸ் (03 விக்கெட்டுகள்), இயன் பிஷப் (04 விக்கெட்டுகள்) மற்றும் ஃப்ராங்லின் ரோஸ் (03 விக்கெட்டுகள்)….மூவரும் அற்புதமாக பந்து வீசியிருப்பார்கள்.
அவர்கள் மூவரும் லைன் என்ட் லென்தில் பந்து வீசியிருப்பார்கள்ள..தமது பந்துகளை கண்ட மேனிக்கு ஸ்விங் செய்து துடுப்பாட்ட வீரர்களை துவம்சம் செய்திருப்பார்கள்….இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு அவர்களது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அப்படியொரு பொறுமலில் மூச்சுத் திணறிப் போயிருப்பார்கள். தமது துடுப்பாட்ட வீரர்கள் களத்துப் போவதும் வருவதுமாக இருப்பதனைக் கண்டு அப்படியே பேயறைந்த கணக்கில் சிவாஜி படத்தில் ரஜனி கையால் அறைபட்ட வடிவேலு எப்படி ஒரே திசையில் எதுவும் பேசாமல் நிற்பாரோ அப்படி இருப்பார் சச்சின். தம்மைச் சுற்றி என்னதான் நடக்கின்றது என்று புரிந்து கொள்ளுவதற்குள்ளே இந்தியா எண்பது ஓட்டங்களுக்கு ஓல் அவுட்.
மேற்கிந்திய அணி 38 ஓட்டங்களால் அற்புதமான ஒரு வெற்றியை அன்றைய தினம் கிரிக்கெட் ஹிஸ்டரியில் பதிவு செய்தது. இப்போது நினைத்தாலும் அந்த மேட்ச் சிலிர்ப்புகளை தந்து கொண்டேயிருக்கின்றது. இதுதான் டெஸ்ட் ஆட்டத்தின் பியூட்டியும் கூட. அதனால்தான் இன்றும் T 20 என்று ஷோர்ட் ஃபோர்மெட கிரிக்கெட்டில் வந்தாலும் டெஸ்ட் ஆட்டங்களை எங்களைப் பொன்றவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
அப்போது பாரத்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இப்போதைய பம்மாத்து அணிக்குமிடையில்தான் எவ்வளவு வித்தியாசம். அப்போதைய வீரர்கள் ஆடியதெல்லாம் Pure genuine Cricket அவ்வளவுதான்.
கிண்ணியா சபருள்ளாஹ்
2021-04-17