மலையக வரலாற்றில் குத்துச்சண்டைப்போட்டில்
ஓர் வரலாற்றுச்சாதனை..!
ஹட்டன், ஹைலன்ஸ் தேசிய பாடசாலையில் தரம் 12ல் கணித பிரிவில் கல்வி கற்கும் பி. பிரதீப் என்ற மாணவன் ,அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற எல்.வி. ஜயவீர ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்குற்பட்ட, 54-57 எடைப்பிரிவில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இப்போட்டியானது கண்டி, புனித சில்வஸ்டர் கல்லூரியில் கடந்த 2022 ஜூலை மாதம் 12ம் திகதி முதல் 16ம் திகதி வரை நடைபெற்ற இப்போட்டியில் காலிறுதியில் கொழும்பு மஹாநாம கல்லூரியுடனும், அரையிறுதியில் கொழும்பு (மௌன்ட் லெவனியா) புனித. ஜோஸப் கல்லூரியுடன் போட்டியிட்டு வெற்றிப்பெற்று இறுதிப்போட்டியில் கொழும்பு வெஸ்லி கல்லூரியின் குத்துச்சண்டை போட்டியாளருடன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இவருக்கான குத்துச்சண்டை பயிற்சியாளராக ஆசிரியர் திரு. செபஸ்டிபத்திக்ராஜ் (செபஸ்டியன்) இருந்துவருகிறார்.
இம்மாணவன் டயகம 1ம் பிரிவில் வசிப்பவராவார்!
தற்போது இவர் ஹட்டன், ஹைலன்ஸ் தேசிய கல்லூரியில் கணிதப்பிரிவில் கல்வி கற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் இருந்து முதல் தடவையாக ஒரு மாணவன் குத்துச்சண்டை போட்டியில் தேசிய ரீதியில் பங்கு பற்றி சாதனையை நிகழ்த்தி உள்ளது இதுவே முதல் தடவையாகும்!