வோர்ட் பிளேஸ் மற்றும் விஜேராம மாவத்தையைச் சுற்றியுள்ள பெட்ரோல் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு இன்று மாலை Community Meal Share இன் குழுவினருடன் இணைந்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீர்ரும் ICC போட்டி தீர்பாளருமான ரொஷான் மஹாநாம தேநீர் மற்றும் பன்களை வழங்கி வைத்தார்.
நாளுக்கு நாள் வரிசைகள் நீண்டு கொண்டே செல்வதால், வரிசையில் நிற்கும் மக்களுக்கு பல உடல்நலக் கேடுகள் ஏற்படும். எரிபொருள் வரிசைகளில் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளுங்கள்.
போதுமான நீர் மற்றும் உணவை எடுத்துச் செல்லுங்கள், உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், உங்களுக்கு அருகில் உள்ள நபரைத் தொடர்புகொண்டு ஆதரவைக் கேளுங்கள் அல்லது 1990க்கு அழைக்கவும்.
இந்தக் கடினமான காலங்களில் நாம் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் ரொஷான் மஹாநாம தனது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
YouTube காணொளிகளுக்கு ?