மஹேல கோட்டை விட்டதை கெட்டியாக பிடித்து வெற்றிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் குமார் சங்ககார ?

மஹேல ஜெயவர்த்தன கோட்டை விட்டதை கெட்டியாக பிடித்து வெற்றிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் குமார் சங்ககார ?

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த டிரென்ட் போல்ட் விளையாடிய காலகட்டங்களில் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை தகர்த்து எதிர் அணியின் அமோக ஆரம்பத்தை எப்படி தகர்தார் என்பது வரலாறு அறிந்த உண்மை.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஜோஃப்ரா ஆர்ச்சர் மீது கொண்ட மோகத்தால் அவரை எடுப்பதற்கு காட்டிய ஆர்வத்தையும் ,ஊக்கத்தையும் அந்த அணிக்கு நெடுங்காலமாக பங்களிப்பு செய்த போல்ட்டை தக்கவைத்துக் கொள்வதில் காட்டாமல் பெரும் தவறு செய்தது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் மகேல அல்ல மாஸ்டர் மைன்ட், மாற்றமாக குமார் சங்ககார தான் அந்த மாஸ்டர் மைன்ட் என்றேன்.

ஐபிஎல் ஆரம்பித்ததும் ராஜஸ்தான் விளையாடிய முதல் போட்டியில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தேன், அதற்கு காரணம் டிரென்ட் போல்ட் போன்ற Power play ல விக்கெட்டுக்களை எடுக்கக்கூடிய ஒரு முக்கியமான ஒரு வீரர் அந்த அணியில் இருக்கின்றமை.

அதுமாத்திரமல்லாமல் பிரஷீத் கிருஷ்ணா, அஸ்வின், சஹால் போன்ற மிகச் சிறந்த பந்துவீச்சு கூட்டணியும் அவர்கள் வசம் இருப்பது தான் இதற்கு பிரதான காரணமாக இருக்கிறது.

ஆகவே மகேல தவற விட்டதை சரியாக கைப்பற்றிய சங்ககார ராஜஸ்தான் அணியின் வெற்றிகளுக்கு அடித்தளமிட்டிருக்கிறார்.

மும்பை வெற்றிக்கான வழியை இன்னும் தேடுகிறது கையிலிருந்து பிரம்மாஸ்திரத்தை விட்டுவிட்டு ?

#IPL2022 #Sangakara #TrentBoult

T.Tharaneetharan