IPL தொடரின் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்.
IPL கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த மார்க் வுட், கடந்த வாரம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கடந்த மாதம் இடம்பெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.7.5 கோடி செலுத்தி மார்க் வுட்டை வாங்கியது.
தற்போது அவர் காயத்தால் விலகியது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.