மிட்செல் மார்ஷ் விலகினால் IPL ஆடப்போகும் வீரர் யார்- ஷானக உள்ளிட்ட மூவருக்கிடையில் போட்டி..!

 

இன்று (28) பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ODI மற்றும் T20I தொடரில் இருந்து ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் , பயிற்சியின் போது இடுப்பில் காயம் ஏற்பட்டதால் நீக்கப்பட்டார்.

 

White ball தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்ஷுக்கு பதிலாக கேமரூன் கிரீன் இடம் பெற வாய்ப்புள்ளது.

 

IPL ஏலத்தில் மார்ஷை ரூ.6.50 கோடிக்கு வாங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இந்த செய்தி கவலையளிப்பதாக காணப்படுகின்றது.

 

மிட்செல் மார்ஷின் காயத்தின் தீவிரம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் அவர் ஐபிஎல் 2022 இல் இருந்து வெளியேற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஐபிஎல் வட்டாரங்களின்படி, மிட்செல் மார்ஷ் IPL ஆடாதுபோனால் அவருக்கு பதிலாக பல வீரர்களை டெல்லி கேப்பிடல்ஸ் இறுதி செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 

இதேபோன்ற வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இலங்கையின் வெள்ளைப் பந்து கேப்டன் தசுன் ஷனகாவும் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக காணப்படுகின்றார்.

PSL போட்டிகளில் கலக்கிய டேவிட் வைஸ் மற்றும் பென் கட்டிங் மற்ற இரண்டு போட்டியாளர்கள் பெயர் அதிகம் பேசப்பட்டாலும் ஆனால் ஷனகா சமீபத்திய இந்திய டி 20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நம்பப்படுகின்றது.