ஆப்கானிஸ்தான் அணியுடனான பரபரப்பான நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் நசீம் ஷா இறுதி ஓவரில் அடித்த 2 சிக்சர்கள் மூலமாக பாகிஸ்தான் மிகச் சிறந்த வெற்றியை தனதாக்கியது ?
இதன் மூலமாக ஆசியக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்டது, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தின ?
The winning sixes from Naseem Shah? Pakistan goes straight into the final ??#STARZPLAY #AsiaCup #AsiaCup2022 #asiacup22 #Watchlive #cricketlive #cricketmatch #teampakistan #teamafghanistan #crickethighlights pic.twitter.com/aMupmwKKGA
— Cricket on STARZPLAY (@starzplaymasala) September 7, 2022
இந்த வெற்றி குறித்து பதிவிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் வர்ணனையாளருமான வசீம் அக்ரம், இருபத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜாவீத் மியாண்டட் இறுதிப் பந்தில் சிக்சர் அடித்து போது அணியில் ஒரு வீரராக நானிருந்தேன், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இரண்டு சிக்சர்களும் எனக்கு ஜாவித் மியாண்டட்டின் அந்த சிக்சரை ஞாபகப்படுத்தியது என பகிர்ந்துள்ளார்.
What a game… even I can’t take such a sensational finish at this age! Boy, what great sixes by young Naseem Shah… I was part of the team when Javed Miandad hit that last ball six… 26 years later today I witnessed two last over sixes… sensational stuff !#boysingreen
— Wasim Akram (@wasimakramlive) September 7, 2022