மீண்டது நம் கிரிக்கெட் தேசம்…!

ஆசியக் கண்டத்தில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாட்டின் ரசிகர்களுக்கும் தங்கள் அணி தோற்கும் நாள் துக்க நாளாகத்தான் ஏறக்குறைய இருக்கும்.

ஆசிய கண்டத்தில் கிரிக்கெட்டில் குறிப்பிடும்படி ஒரு சக்தியாக, திட்டங்களை களத்தில் சரியாகச் செயல்படுத்தி, இருப்பதைக் கொண்டு வெற்றி பெறும் ஒரு அணியாக இலங்கை அணி திகழ்ந்து வந்தது. ஆனால் முக்கிய நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்றது, இன்னும் சில காரணங்களால் இலங்கை நாட்டின் கிரிக்கெட் வீழ்ச்சி அடைந்தது என்றே கூறலாம்.

இப்படியான ஒரு நிலையில் இலங்கை அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர்கள் அடைந்த மன வருத்தத்தை விட, அந்த அணிக்காக நின்ற ரசிகர்கள் அடைந்த வருத்தங்கள் மிக அதிகம். அவர்கள் சமுதாயத்திலும், சமூக வலைதளங்களிலும் பல கேலிகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இன்று இலங்கை கிரிக்கெட் அணி, ஒரு அணியாக இணைந்து, தனிப்பட்ட எந்த வீரரையும் சாராமல் ஆசியக் கோப்பையை வென்றுள்ளது மிகச் சிறப்பானது. இந்த வெற்றி அணிக்காக வெளியில் ஆதரவாக நின்று கேலிக்கு உள்ளாக்கப்பட்ட ரசிகர்களுக்கானது.

இன்றைய நாள் இரவில் இலங்கை அணியினரை விட இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்கள் எவ்வளவு மனம் நிறைந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள் என்று என்னால் மிகத் தெளிவாக உணர முடியும். நானும் அவர்களது மகிழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் நிர்வாகத்திற்கும் குறிப்பாகப் பயிற்சியாளர் சில்வர் வுட்டுக்கு ❤️

✍️ Richards