மீண்டுமொரு தடவை நியூசிலாந்தை புரட்டிப்போட்டது பங்களாதேஷ்- தொடரையும் இலகுவாய் வென்றது..!

மீண்டுமொரு தடவை நியூசிலாந்தை புரட்டிப்போட்டது பங்களாதேஷ்- தொடரையும் இலகுவாய் வென்றது..!

பங்களாதேஸ் கிரிகட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் நியூஸிலாந்து அணிக்கும், வங்கதேசம் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இடம்பெற்று வருகிறது.

உலகக்கிண்ண போட்டி தொடருக்கு முன்னர் இடம்பெறும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலாவது போட்டியில் நியூசிலாந்தை 60 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்த பங்களாதேஸ், இன்றைய நான்காவது போட்டியில் 93 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழக்கச் செய்து, மிக இலகுவான 6 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றியை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஸ் சுழற்பந்து வீச்சாளர்களின்  அதீத ஆற்றல் வெளிப்பாடு காரணமாக தொடர்ச்சியாக மிகச்சிறந்த வகையில் T20 போட்டிகளில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

அவுஸ்திரேலியாவுடனான  5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றியது, இப்போது நியூசிலாந்து அணியுடனான தொடரையும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 3-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் 93 ஓட்டங்களை நியூஸிலாந்து பெற்றுக்கொள்வதற்கு நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர் பிரெண்டன் யங் காரணமாக இருந்தார், பங்களதேஷ் சார்பில் சுழற்பந்து வீச்சாளர் நஸூம் அகமத் 4 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலளித்த பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.