மீண்டும் இலங்கை அணியுடன் வாஸ்…!

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமிந்த வாஸ் அண்மையில் சம்பள தகராறு காரணமாக திடீரென பதவி விலகினார் .

மேற்கிந்திய தீவுகள் சுற்றுலாவுக்கு முன்னதாக திடீரென அவரது பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ஆயினும் இப்போதைய நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பு சமிந்த வாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீண்டும் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.