மீண்டும் தலைவரானார் ஷம்மி சில்வா

Sri Lanka cricket தலைவர் ஷம்மி சில்வா, 2025-2027 ஆம் ஆண்டுக்கான தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் (SLC) தலைவராக ஷம்மி சில்வா நான்காவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று (31) நடைபெற்ற வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது (AGM) அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் இந்த நியமனம் 2025 முதல் 2027 வரையிலான இரண்டு ஆண்டு காலத்திற்கு அமுலில் இருக்கும்.

கடந்த ஆண்டு டிசம்பரில், இந்தியாவின் தற்போதைய ICC தலைவர் ஜெய் ஷாவுக்குப் பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவராக சில்வா நியமிக்கப்பட்டார்.

தொழிலதிபரான சில்வா, 2023 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கவுடன் மோதினார். சில்வாவுடனான தனிப்பட்ட மோதல் காரணமாக அமைச்சர் இடைக்காலக் குழுவை நியமித்ததால் இலங்கை ICC யிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.

ICC இடைநீக்கத்தின் உடனடி விளைவாக, கடந்த ஆண்டு ஜனவரியில் இலங்கையில் நடைபெறவிருந்த U-19 ஆண்கள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது.

விளையாட்டு அமைச்சர் பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார், மேலும் நீதிமன்றம் சில்வாவின் SLC நிர்வாகத்தை மீண்டும் நிலைநாட்டியது.

#Srilankacricket #Shammisilva

Previous article*தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் 125 வருட பூர்த்தியை கொண்டாடுகிறது.*
Next articleரியான் பராக் – ₹12 லட்சம் அபராதம்