இனமத பாகுபாட்டை பெரிய அளவில் காட்டிக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட்டில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு சிறுபான்மை வீரராக முகமட் சிராஸ் வாய்ப்பு பெற்றார் .
ஆனால் இரண்டாவது போட்டியிலேயே ஆடும் பதினொருவரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை 💔
நாளை இடம் பெற உள்ள மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது, இந்தத் தொடரில் அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு முழுமையான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதும் வேதனைக்குரியதே 😞
இதற்கு பின்னர் வரப்போகின்ற தொடர்களிலே, இப்போது காயத்தில் இருக்கின்ற வீரர்கள் அத்தனை பேரும் தயார் நிலையில் இருப்பார்களாக இருந்தால், அவர்களோடு எல்லாம் போட்டி போட்டு அணிக்குள்ளே வர முடியுமா என்பதும் இன்னும் சிந்திக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.
எது எவ்வாறாகினும் சிராஸ் போன்ற நீண்ட காலம் போராடிக் கொண்டிருக்கின்ற வீரர்களுக்கு ஆண்டவன் வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்பதே பிரார்த்தனைகள் 🙌🙏
காத்திருக்கலாம் ✌️
#Mohamedshiraz #SLvIND