முக்கிய பொறுப்பை ஏற்க மறுத்த அக்ரம்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) பதவி ஏற்பதற்கான வாய்ப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நிராகரித்துள்ளார்.

பிரதம நிர்வாக அதிகாரியாக (CEO) அல்லது தலைவரின் ஆலோசகராக பணியாற்ற அக்ரம் அணுகப்பட்டார், ஆனால் அவர் முழு நேரப் பாத்திரத்தை காரணம்காட்டி மறுத்துள்ளார்.

விவரங்களின்படி, PCB யின் தலைவர், மத்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றும் மொஹ்சின் நக்வி, தனது இரட்டைப் பொறுப்புகள் காரணமாக கிரிக்கெட்டுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டார்.

இந்தப் பிரச்சினையைத் தணிக்க, கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை முன்னாள் கிரிக்கெட் வீரரிடம் ஒப்படைக்க நக்வி முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.