முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என்ன- ஹசரங்க தெளிவுபடுத்தினார்..!

முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என்ன- ஹசரங்க தெளிவுபடுத்தினார்..!

இலங்கை சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 163/5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

164 இலக்குடன் ஆடிய இலங்கை அணி முதல் 6 ஓவர்களில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது, 6 ஓவர்களில் இலங்கை அணி ஓட்டங்களை பெறுவதற்கு தடுமாறி அதிக  Dot Ball களை சந்தித்தமையே இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

இறுதியில் சந்திமால் (66*) அரைச்சதம் அடித்தார், அதேபோன்று சாமிக கருணாரத்ன இரண்டு சிக்சர்கள் அடங்கலாக 22* ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார், ஆயினும் இலங்கை அணி போட்டியில் 28 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்க ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக இலங்கை முதல் 6 ஓவர்களில் அதிகமான Dot Ball களை சந்தித்தமையே இலங்கை அணியின் தோல்விக்கு பிரதானமான காரணமாக இருந்ததாகவும் ஹசரங்க கருத்து தெரிவித்துள்ளார்.

முழுமையான காணொளியை பாருங்கள். நன்றி நியூஸ்வைர்.

?????