தொடரில் முதல் வெற்றி பெறுமா இந்தியா – இலகுவான வெற்றி இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆரம்பித்தது.

முதல் வெற்றி பெறுமா இந்தியா – இலகுவான வெற்றி இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆரம்பித்தது.

இங்கிலாந்து கிரிகெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இடம்பெற்று வருகிறது.

நாட்டிங்காம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 209 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் 208 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டதே சாதனையாக இருக்கின்றபோது, இந்திய அணி 209 ஓட்டங்களை பெற்று இந்த மைதானத்தில் வெற்றியை பெறுமாக இருந்தால் இங்கிலாந்தின் நாட்டிங்காம் மைதானத்தில் புதிய வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிட்டும்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்தாலும் இரண்டாவது இன்னிங்சில் ரூட்டின் அற்புதமான சதத்தின் துணையோடு 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

இந்தியா தங்களுடைய முதலாவது இன்னிங்சில் புஜாரா ,கோலி, ரஹானே சொதப்பினாலும்கூட கடைநிலை ஆட்டக்காரர்கள் 72 ஓட்டங்களை இறுதி மூன்று விக்கெட்டுக்களில்  பெற்றுக்கொள்ள இந்தியா மிகச்சிறப்பான 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

இதன் அடிப்படையில் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 209 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

புஜாரா, கோலி, ரஹானே இந்த மூவரின் துடுப்பும் மிகப்பெரிய பங்களிப்பு நல்குமாக இருந்தால் இந்தியாவால் இந்த போட்டியில் வெற்றியை இலகுவாக்க முடியும் என்றே கருதப்படுகிறது.

போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியமை சிறப்பம்சம் எனலாம்.

209 எனும்  வெற்றி இலக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு நாளை இறுதி நாளில் இன்னும் 157 ஓட்டங்கள் பெறவேண்டும் , 9 விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்கும் நிலையில் இந்த வெற்றியை இந்தியா பெற்றுக்கொள்ளுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் 200க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய 10 சந்தர்ப்பங்களில் 8 தடவைகள் தோல்வியை தழுவியுள்் ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை போட்டியின் இறுதி நாள் .