முன்னணி அவுஸ்திரேலிய வீரர் திடீர் ஓய்வு அறிவித்தல்..!

முன்னணி அவுஸ்திரேலிய வீரர் திடீர் ஓய்வு அறிவித்தல்..!

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்ஸன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

31 வயதாகும் பட்டின்ஸன் ஆஸ்திரேலிய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளையும், 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழத்தி்யுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு டேவிட் வார்னர், மிட்ஷெல் ஸ்டார்க் ஆகியோருடன் சேர்ந்து பட்டின்ஸன் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகினார்.

 

இந்நிலையில் தொடர்ச்சியாக காயத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டுவருவதால் சர்வேதச கிரிக்கெட்டிலிலருந்து விடைபெறுவதாக பட்டின்ஸன் திடீரென அறிவித்துள்ளார்.

கம்மின்ஸ் போன்ற வீர்ர்களுக்கு இணையான திறமை கொண்ட பட்டின்சன் உபாதை காரணமாக விரைவாகவே விடைபெற்றுள்ளமை கவலையானதே.