மும்பை இந்தியன்ஸ்க்கு மரண பயத்தை காட்டும் தல தோனி – பந்தெல்லாம் சிக்சர்தான் ..! (வீடியோ இணைப்பு)
இந்தியன் பிரீமியர் லீக் போட்டி தொடரின் 14வது போட்டி தொடரின் இரண்டாவது அத்தியாயம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
IPL இன் எல் கிளாசிகோ என அழைக்கப்படுகின்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நாளை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி கடந்த இரண்டு சீசன்களில் துடுப்பாட்டத்தில் தடுமாறுகிறார் எனும் குற்றசாட்டு உள்ளது, கடந்த 2020 காலத்தில் 14 போட்டிகளில் விளையாடிய தோனி 200 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டார், இந்த ஐபிஎல்லில் இதுவரை ஆறு தடவைகள் துடுப்பெடுத்தாடி உள்ள தோனியும் 37 ஓட்டங்கள் மட்டுமே தான் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை குவிக்க தோனி தடுமாறி வரும் நிலையில், ரசிகர்களுக்கு கொஞ்சம் கவலையை கொடுக்க , பயிற்சி போட்டியில் தோனி சிக்சர்களை விரட்டுகின்ற ,மைதானத்திற்கு வெளியில் பந்துகளை அனுப்புகின்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
பயிற்சி ஆட்டம் ஒன்றில் 27 பந்துகளில் தோனி 91 ஓட்டங்கள் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவுக்கு பின்னர் ,மும்பைக்கு தல தோனி மரண பயத்தை காட்டுகிறார் என சென்னை ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.
All arealayum Thala…?#WhistlePodu #Yellove ?? @msdhoni pic.twitter.com/Zu85aNrRQj
— Chennai Super Kings – Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) September 18, 2021