மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்கள் UAE, தென்னாப்பிரிக்கா T20 லீக்களில் புதிய அணிகளின் பெயர்களை வெளியிட்டனர்..!

மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்கள் UAE, தென்னாப்பிரிக்கா T20 லீக்களில் புதிய அணிகளின் பெயர்களை வெளியிட்டனர்..!

IPL உரிமையாளரான மும்பை இந்தியன்ஸ் (MI) உரிமையாளர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) தங்கள் இரண்டு புதிய அணிகளின் பெயர் மற்றும் பிராண்ட் அடையாளத்தை வெளியிட்டனர்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருக்கும் டி20 லீக்களில் முதலீடு செய்தது.

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் கேப்டவுனை தளமாகக் கொண்ட அணியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியதுடன், UAE யிலும் ​​ILT20யில் ஒரு அணியை வாங்கியது.

கேப் டவுன் அடிப்படையிலான உரிமையானது MI கேப் டவுன் என அறியப்படும் அதேசமயம், MI எமிரேட்ஸ் அவர்களின் ILT20 அணியின் பெயராகும்.

ட்விட்டரில், மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளின் பெயர்களை அறிமுகப்படுத்தியதுடன் அவர்களை தமது குடும்பத்திற்கு வரவேற்றது. “எங்கள் குழுவின் குடும்பத்தில் @MIEmirates & @MICapeTown ஐ வரவேற்கிறோம்!” என ட்வீட் செய்துள்ளது.

 

 

 

Previous articleதென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள புதிய T20 லீக்- வெளிவரும் புதிய தகவல்கள்..!
Next articleT20 தரவரிசை வெளியீடு -முதலிடம் யாருக்கு ?