ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 24-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 12 ரன்கள் இருக்கும் போது ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சுப்மன் கில் 13 எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் ஹர்த்திக் பாண்ட்யா-அபினவ் மனோகர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மனோகர் சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஹர்த்திக் பாண்ட்யா 52 பந்துகளில் 87 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துர். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.
இதனால் 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடியது. அந்த துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். படிகல் ரன் எதுவும் எடுக்காத நிலையில் அவுட்டானார்.
கேப்டன் சஞ்சு சாம்சன் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். ஹெட்மயர் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#Abdh