முறைகேடாக நடந்துகொண்ட சாகிப் அல் ஹசனுக்கு போட்டித்தடை- ஒரேயடியா தூக்கி வெளியில போடுங்க சார் :)

பங்களாதேஷில் இடம்பெற்ற உள்ளூர் போட்டியொன்றில் முறைதவறி நடந்துகொண்ட பங்களாதேஷ் அணியின் முன்னணி சகலதுறை வீரர் சாகிப் அல் ஹாசனுக்கு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.

டாக்கா T20 பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்டமிழப்பு ஒன்றை கொடுக்க நடுவர் மறுத்தார் என்பதற்காக விக்கெட்டுக்களை காலால் தள்ளிவிட்டு, நடுவரோடு தகராறில் ஈடுபட்டிருந்தார் சாகிப் அல் ஹசன் .

சாகிப் அல் ஹசன், பின்னர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருந்தாலும் ரசிகர்களை இவர்மீது அதிக வெறுப்பில் இருக்கின்றனர். நீண்டகாலமாக சர்வதேச கிரிக்கெட் ஆடும் ஒருவர் இவ்வாறு குழந்தைத்தனமாக நடந்துகொள்வதை மன்னிக்க முடியாது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும்.

இந்தநிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, இவருக்கு 4 போட்டிகளில் விளையாட முடியாத வண்ணம் தடை வித்தித்துள்ளது.அதேநேரம் 5800 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. (இலங்கை மதிப்பில் 1 மில்லியனுக்கும் அதிகம் )

ஆனாலும் ஒரேயடியாக இவரை தூக்கி வெளியில் போடவேண்டும் எனும் கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் அதிகம் காணக்கிடைக்கின்றது.

Previous articleபான்ட் அதிரடி சதம், கில் நம்பிக்கை கொடுத்தார், பயிற்சியில் இந்தியர்களின் ஆதிக்கம்..! (விபரங்கள் )
Next articleபோட்டியின் நடுவே நிலை குலைந்த Eriksen: யூரோ கிண்ண போட்டி இடை நிறுத்தம்