முழுநேர தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு- மஹேல ஜெயவர்த்தன தெரிவித்த கருத்து ..!
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக மஹேல ஜெயவர்தன நியமிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
ரவி சாஸ்திரியின் பயிற்றுவிப்பு காலம் வருகின்ற உலக டுவென்டி டுவென்டி தொடருடன் நிறைவு பெறுகிறது, ஆகவே அடுத்து தலைமை பயிற்சியாளராக டிராவிட் அல்லது மஹேல ஜெயவர்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
ஐபிஎல் இன் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக செயல்பட்டு வரும் மஹேல ஜெயவர்தன, அடுத்தஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இது தொடர்பில் மஹேல ஜெயவர்தன ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் வீரராக காலத்தை செலவழித்து இருக்கிறேன் ,என்னுடைய குடும்பத்தாரோடு நேரத்தை செலவு செய்ய வேண்டிய தேவையும், கடமையும், பொறுப்பும் இருக்கிறது.
ஆகவே இன்னும் தொடர்ச்சியாக பயிற்சியாளர் பணியையும் ஏற்றுக் கொண்டு பயணிப்பது என்பது சிரமமான காரியமாக இருக்கும் .
ஆகவே முழு நேர பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது சாத்தியமற்றது, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளின் பயிற்சியாளராக இருப்பது மட்டுமே தனக்கு பொருத்தமானதாக இருக்கும் என மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்..
ஆக மொத்தத்தில் முழு நேர பயிற்சியாளர் பொறுப்பில் செயல்பட முடியாது எனும் கருத்தை திட்டவட்டமாக மஹேல மறுத்திருக்கிறார்.