வங்காளதேச பிரீமியர் லீக் 2024 இல் பிப்ரவரி 18 அன்று முஸ்தாபிசுர் ரஹ்மான் காயமடைந்தார். லிட்டன் தாஸ் அடித்த ஷாட் அவருக்கு தலையில் அடிபட்டது. இதையடுத்து முஸ்தாபிசுர் ரஹ்மான் தலையில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடந்தது.
முஸ்தாபிசுர் மற்றும் லிட்டன் இருவரும் கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் அங்கத்தினர். பிப்ரவரி 19 அன்று சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.
முஸ்தாபிஸூர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கொமிலாவின் அடுத்த போட்டியில் அவரால் விளையாட முடியாது.
முஸ்தாபிஸூர் இந்த சீசனில் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது Economy 9.56 ஆகவும், விக்கெட் எடுக்கும் சராசரி 23.9 ஆகவும் உள்ளது. முஸ்தாபிசூரின் அணியான கொமிலா தற்போது 9 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ரங்பூர் ரைடர்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொமிலாவுக்கு இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன. முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.