மெஸ்ஸிக்கு ஏற்பட்ட அதே சிக்கல் நிலமை ரொனால்டோவுக்கும் – வெற்றி ரொனால்டோவுக்கே..!

மெஸ்ஸிக்கு ஏற்பட்ட அதே சிக்கல் நிலமை ரொனால்டோவுக்கும் – வெற்றி ரொனால்டோவுக்கே..!

கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இன்னுமொரு விஷயம், கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்துடன் இணைந்த்தன் பின்னரான அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பிலாகும்.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னுடைய தாய் வீடான  மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு செல்வதல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தநிலையில் ரொனால்டோவின் உடைய அதிர்ஷ்ட இலக்கமான 07 இலக்க  சீருடையை அணிந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடுவதில் சிக்கல் எழுந்திருக்கிறது.

 

என்ன காரணம் என்றால் ஏற்கனவே 07 ம் இலக்க சீருடையோடு அந்த அணியின் இன்னுமொரு முக்கியமான வீரரான கவானி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இதன் காரணத்தால் கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த இலக்க சீருடை அணிந்து விளையாடுவார் என்பது தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் ஒரு குழப்பகரமான நிலைமை காணப்படுகிறது.

ஆயினும் 7 ம் இலக்க சீருடையோடு கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுவதில் சிக்கல் இருக்காது என அந்த அணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மெஸ்ஸியும் பார்சிலோனா கழகத்திலிருந்து பிரிந்தபோதும் இதே மாதிரியான சிக்கல்கள் உருவானது,

மெஸ்ஸி நீண்ட காலமாக பயன்படுத்திய 10ஆம் இலக்க சீருடையை பிஎஸ்ஜி கழகத்தில் ஏற்கனவே விளையாடிக் கொண்டிருக்கும் பிரேசிலின் நெய்மர் பயன்படுத்துவதால், 10ஆம் இலக்க சீருடை அணிந்து விளையாட முடியாத ஒரு நிலைமை மெஸ்ஸிக்கு உருவானது.

அதனால் மெஸ்ஸி ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய 30 ஆம் இலக்க சீருடையோடு PSG கழகத்திற்காக விளையாடி வருகின்றார்.

 இதே மாதிரியான சிக்கல் நிலைமை ரொனால்டோவுக்கு எழுந்திருந்தாலும் ரவனால்டோ  தன்னுடைய 7 ம் இலக்கத்தை பயன்படுத்துவதில் சிக்கலை எதிர் கொள்ள மாட்டார் எனவும் அறியப்படுகிறது.

கவானி 21ஆம் இலக்க சீருடை அணிந்து விளையாடுவார் என்று அறியப்படுகிறது.