மெஸ்ஸிக்கு ஏற்பட்ட அதே சிக்கலை சாதுர்யமாக வென்று கொடுத்த மான்செஸ்டர் யுனைடெட்- ரொனால்டோ பாராட்டு..!

மெஸ்ஸிக்கு ஏற்பட்ட அதே சிக்கலை சாதுர்யமாக கையாண்டு வென்று கொடுத்த மான்செஸ்டர் யுனைடெட்- கிறிஸ்டியானோ ரொனால்டோ மனம் திறந்து பாராட்டு..!

பிரபல கால்பந்தாட்ட வீரரான போர்த்துக்கல் தேசிய அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அண்மையில் தன்னுடைய தாய் கழகமான மான்செஸ்டர் யுனைட்டட் கழகத்துக்கு ஒப்பந்தமாகியிருந்தார் .

இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பயன்படுத்திய 7 ம் இலக்க சீருடையை அந்த கழகத்தில் யார் பயன்படுத்துவது என்ற கேள்வி உருவாகி இருந்தது.

ஏற்கனவே அந்த மான்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக விளையாடி வரும் எடிசன் கவானி எனும் வீரர் 7 ம் இலக்க சீருடை அணிந்து விளையாடிவருகிறார். கவானிக்கு 21 ம் இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெஸ்ஸி, பார்சிலோனா கழகத்தில் இருந்து பிஎஸ்ஜி கழகத்திற்காக மாற்றல் ஆனபோது மெஸ்ஸியின் ராசியான 10 ம் இலக்கத்தை அவருக்கு வழங்க முடியாது, PSG 30 ஆம் இலக்க சீருடையை வழங்கியது.

ஆனால் இதே மாதிரியான சிக்கலை சாதுரியமாக முடித்துக் கொடுத்திருக்கிறது மான்செஸ்டர் யுனைட்டெட் கழகம்.

இது தொடர்பில் ரொனால்டோ மனம்நெகிழ்ந்து நன்றி பாராட்டினார்.

“ஏழாவது இலக்க ஜேர்சியை மீண்டும் பெற முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நம்பமுடியாத சம்பவத்துக்கு எடிக்கு நான் ஒரு பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன்.” என்றார்.

 ஓல்ட் டிராஃபோர்டில் சனிக்கிழமையன்று Newcastle அணிக்கு எதிராக தனது இரண்டாவது அறிமுகத்தை செய்ய உள்ளார். முன்னர் 2003 மற்றும் 2009 க்கு இடையில் யுனைடெட்டின் நம்பர் 7 ஜேர்சி அணிந்த ரொனால்டோ ஒன்பது கோப்பைகளை வென்று கொடுத்தார்.

அவற்றில் மூன்று பிரீமியர் லீக்  மற்றும் சாம்பியன்ஸ் லீக் அடங்கும், அவர் 2009 இல் சேர் அலெக்ஸ் பெர்குசனின் கீழ் தனது முதல் பலோன் டி’ஆரை வென்றார்.

ரொனால்டோ 118 கோல்களை அடித்ததுடன் 292 ஆட்டங்களில் 69 Assist வழங்கினார்.

ரொனால்டோ ஸ்போர்டிங் லிஸ்பன், மான்செஸ்டர் யுனைட்டெட், ரியல் மாட்ரிட் மற்றும் ஜுவன்டஸ் ஆகிய கழகங்களுக்காக 895 போட்டிகளில் 674 கோல்களையும் 229 Assist களையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.