மெஸ்ஸியின் 10ஆம் இலக்க சீருடை அணிந்து பார்சிலோனாவிற்காக விளையாடப் போகும் அந்த அதிர்ஷ்டக்கார வீரர் யார் தெரியுமா- பார்சிலோனா அதிகாரபூர்வமாக அறிவித்தது ..!
பிரபல கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி அண்மையில் பார்சிலோனா கழகத்திலிருந்து பிரியா விடை பெற்று PSG கழகத்தில் இணைந்து விளையாடி வருகிறார்.
21 ஆண்டுகளாக பார்சிலோனா கால்பந்தாட்ட ரசிகர்களால் தங்கள் நாயகனாக கொண்டாடப்பட்ட மெஸ்ஸி, PSG கழகத்துக்கு பிரிந்து சென்றமையை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது போனது.
இதன் காரணத்தால் மெஸ்ஸி அணிந்து விளையாடிய 10ஆம் இலக்க சீருடைக்கு மெஸ்ஸியோடு சேர்த்து விடை கொடுக்கப்பட வேண்டும் எனும் கோஷங்களும் அதிகமாக எழுந்த வண்ணமிருந்தன.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை பார்சிலோனா கழகம் தங்கள் கால்பந்து அணியின் 10 ம் இலக்க சீருடை அணிந்து விளையாட போகும் அடுத்த தலைமுறை வீர்ர் யார் என உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
பார்சிலோனா கழகத்திற்காக 10ஆம் இலக்க சீருடை நட்சத்திர கால்பந்து ஜாம்பவான்கள் பலரால் அணிந்து விளையாடபட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரரான ரொனால்டினியோ அதற்கு பின்னர் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது ஸ்பெயின் தேசிய கால்பந்தாட்ட அணியின் வீரரான அஞ்சு பார்டி எனும் 18 வயதான டீன் ஏஜ் வீீரர் மெஸ்ஸியின் 10ஆம் இலக்க சீருடை கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Our new number ?
Made in La Masia ?❤️
⭐️ @ANSUFATI ⭐️ pic.twitter.com/co6NcpjxOx— FC Barcelona (@FCBarcelona) September 1, 2021
31 மற்றும் 22 ம் இலக்க சீருடைகளை அணிந்த 18 வயதான அஞ்சு பார்டி இனிவரும் காலங்களில் ராசியான, நட்சத்திர அந்தஸ்துடைய 10ஆம் இலக்க சீருடையோடு விளையாடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராசிக்கார வீரர்தான் என்று அஞ்சு பார்டி கொண்டாடப்படுகின்றார்.