மெஸ்ஸியை வரவேற்க பலத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளும் PSG கழகம்…!
பிரபல கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கழகத்திற்கு விடைகொடுத்ததை தொடர்ந்து, அடுத்து எந்த கழகத்தோடு இணைவார் என ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்து வருகின்றனர்.
பிந்திய தகவல்களின் அடிப்படையில் Paris St German எனப்படும் PSG கழகம் மெஸ்ஸியை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் மெஸ்ஸி அவருடைய மருத்துவ பரிசோதனைகளுக்காக பிஎஸ்சி கழகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
இதனை கொண்டாடுவதற்காகவும் வரவேற்கவும் PSG ஆதரவாளர்கள் பெரும் எடுப்பில் தயார் நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
புகைப்படங்கள் இணைப்பு ????