மெஸ்ஸி இல்லாத நிலையில் ரொனால்டோவின் Juvantus அணியை பதம் பார்த்தது பார்சிலோனா..!

உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பார்சிலோனாவுக்காக லியோனல் மெஸ்ஸி விளையாடுவதை பார்க்காமல் இருப்பது ஜீரணிக்க மிகவும் கடினமாக இருக்கும்.

21 வருடகால வாழ்க்கையில் பல கோப்பைகளை வென்ற பிறகு மெஸ்ஸி கிளப்புக்கு உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை கொடுத்தார்.

இருப்பினும், பிளாக்ரானா ஜோன் கேம்பர் கோப்பையில் ஜுவென்டஸை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று மெஸ்ஸி இல்லாமல் வெற்றிகரமாக கால்பந்து சீசனைத் தொடங்கியது பார்சிலோனா.

மெம்பிஸ் டெபே, மார்ட்டின் ப்ரைத்வைட் மற்றும் ரிக்கி பியூக் ஆகியோர் பார்சிலோனாவுக்காக கோல்களை அடித்தனர்.

நேற்றைய கால்பந்து போட்டியில் ஜுவென்டஸ் Vs பார்சிலோனா அணியின் முக்கிய வீரர்களை காணமுடியவில்லை.

ஒலிம்பிக்கில் போட்டியிடுவதால் செர்ஜியோ அகுயெரோ (உபாதை) மற்றும் புதிய கையெழுத்திட்ட எரிக் கார்சியா மற்றும் டீன் ஏஜ் வீர்ர் பெட்ரி ஆகியோர் இல்லாததால், ரொனால்ட் கோமன் 4-3-3 அமைப்பில் மெம்பிஸ், ப்ரைத்வைட் மற்றும் அன்டோய்ன் கிரிஸ்மேன் ஆகியோரை நேற்றைய போட்டியில் களமிறக்கினார்.

செர்ஜியோ புஸ்கெட்ஸ் போன்றவர்கள் யூசுப் டெமிர் மற்றும் செர்ஜி ராபர்டோ ஆகியோருக்கு முக்கிய ஆதரவை வழங்குகிறார்கள். பின் நான்கில் செர்ஜினோ டெஸ்ட், ஜெரார்ட் பிக், ஜோர்டி ஆல்பா மற்றும் ஆர் அராஜோ ஆகியோர் பங்களித்தனர்.

எது எவ்வாறாயினும் மெஸ்ஸி இல்லாத நிலையில் பார்சிலோனா அணி பலம் பொருந்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான Juvantus அணிக்கு எதிராக 3-0  என வென்று அசத்தல் வெற்றி பெற்றுள்ளமை பார்சிலோனா ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

இனிவரும் நாட்களில் மெஸ்ஸி இல்லாமல் பார்கா எப்படி ஜொலிக்க போகிறது என்பதே ரசிகர்களின் இப்போதைய கேள்வியாக உள்ளது.

Highlights ????