மெஸ்ஸி பார்சிலோனாவில் வைத்தே அவருடைய கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுப்பார் என்றும் மீண்டும் பார்சிலோனா திரும்புவது உறுதி எனவும் முன்னாள் பார்கா மற்றும் அர்ஜென்டினா மிட்ஃபீல்டர் ஜுவான் ரோமன் ரிகல்மேயின் கருத்து தெரிவித்தார்.
முன்னால் பார்சிலோனா நட்சத்திரமும் பிரபல கால்பந்தாட்ட வீரருமான லயோனல் மெஸ்ஸி, பார்சிலோனா கழகத்தில் இருந்து விடைபெற்று PSG கழகத்துக்கு அண்மையில் ஒப்பந்தமாகியிருந்தார்.
குறிப்பாக நெய்மர், கைலியன் மாப்பே ஆகியோருடன் இணைந்து PSG கழகத்திற்காக சாம்பியன் லீக் கிண்ணத்தை வெற்றிகொண்டு கொடுப்பார் , பின்னர் பிஎஸ்ஜி கழகத்திலிருந்து விடைபெற்று, தன் கால்பந்து உலகின் இறுதி காலகட்டத்தில் நிச்சயம் பார்சிலோனா கழகத்திற்காக மெஸ்ஸி விளையாடுவார் என்று முன்னாள் பார்கா மற்றும் அர்ஜென்டினா மிட்ஃபீல்டர் ஜுவான் ரோமன் ரிகல்மேயின் கருத்து தெரிவித்தார்.
சொந்த ரசிகர்கள் மத்தியில்தான் ஒட்டு மொத்தமான கால்பந்து வாழ்வுக்கும் விடைகொடுப்பார் எனும் நம்பிக்கையை இப்போது முன்னாள் வீரர் முன்னாள் மிட்ஃபீல்டர் ஜுவான் ரோமன் ரிகல்மேயின் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆர்ஜெண்டினா தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவராக 10ஆம் இலக்க ஜேர்சி அணிந்து கலக்கியவர் ஜுவான் ரோமன் ரிகல்மே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அணமையில் 36 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னுடைய தாய் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு மீண்டும் சென்று இணைந்து கொண்டிருக்கின்றார்.
மெஸ்ஸியும்யும் தன்னுடைய கால்பந்து உலகின் இறுதி காலகட்டத்தை பார்சிலோனா கழகத்திற்காக விளையாடியே முடிப்பார் என்பதே அவரது கருத்தாக அமைந்திருக்கிறது.