மேற்கிந்திய தீவுகளின் இளம் சகலதுறை ஆட்டக்காரரை இணைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் …!
ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்றன, இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சாம் கர்ரான் முதுகு பிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்றைய நாளில் மேற்கிந்திய தீவுகளின் இளம் சகலதுறை ஆட்டக்காரர் டொமினிக் டிரேக்ஸ் எனும் வீரரை அணியில் கர்ரானுக்கு பதிலாக இணைப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே டொமினிக் டிரேக்ஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் வலைப்பந்து (Net Bowler) பயிற்சியாளர்கள் குழாமில் UAE யில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் இந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் (CPL) பருவத்தில் சிறப்பாக செயல்பட்டிருந்தார், அங்கு அவர் தனது அணிக்காக ஒரு போட்டியை வென்று கொடுத்தவர், 24 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக சிறப்பித்தவர்.
சாம்பியன் மகுடம் வென்ற டிவைன் பிராவோ தலைமையிலான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ஒட்டுமொத்தமாக, டொமினிக் டிரேக்ஸ் ஐந்து இன்னிங்ஸ்களில் 162.90 ஸ்ட்ரைக் ரேட்டில் 102 ரன்கள் எடுத்தார், மேலும் 11 இன்னிங்ஸ்களில் 16 விக்கட்டுக்கள் கைப்பற்றி CPL இல் நான்காவது அதிக விக்கெட் எடுத்தவர் எனும் பெருமையும் பெற்றவர்.
24 வயதான டொமினிக் டிரேக்ஸ் ,இந்த ஆண்டு கரிபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சம்பியன் மகுடம் சூடுவதற்கு பிரதானமான காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ரவி ராம்பால், டொமினிக் டிரேக்ஸ், ஃபிடல் எட்வர்ட்ஸ் மற்றும் ஷெல்டன் கோட்ரெல் ஆகிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் நெடுநாட்களாக Net Bowlers ஆக செயல்படும் நிலையில் இவர் உடனடியாக சென்னை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.