மொகமட் ரிஸ்வானுக்கு MRI பரிசோதனை- PCB யின் அறிவுறுத்தல்…!

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வலது காலில் வலி ஏற்பட்டதால் இன்று முன்னெச்சரிக்கையாக MRI பரிசோதனை செய்ய உள்ளார்.

வலது கை தொடக்க வீரர் இந்தியாவுக்கு எதிராக 51 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார், இது அவர்களின் பரம எதிரிகளுக்கு பேரழிவு தரும் அடியாக அமைந்தது, இதனால் பாகிஸ்தான் 5 விக்கெட் வெற்றியைப் பதிவு செய்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) கூற்றுப்படி, ரிஸ்வான் ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்தபோது அவரது வலது காலில் உபாதைக்குள்ளாகி அவர் சிரமப்பட்டார்.

காயம் இருந்தபோதிலும் வீரர் தொடர்ந்து விளையாடி 71 ரன்கள் எடுத்தால், அவருக்கு முன்னெச்சரிக்கையாக MRI செய்யப்படவுள்ளதாக PCB தரப்பு குறிப்பிடுகிறது.

இந்தியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட பாகிஸ்தான், போட்டியின் முக்கியமான கட்டத்திற்குச் செல்லும்போது பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் இறுதிப் போட்டியில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அது நடக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கியமானவராக இருப்பதால் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக்கவே MRI செய்யப்படவுள்ளது.