யுபுன் அபேகோன் புதிய சாதனை படைத்தார்..!

இன்று (03) நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் ஓட்டப்பந்தய வீர்ர் யுபுன் அபேகோன் தெற்காசிய மற்றும் இலங்கை சாதனைகளை புதுப்பித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 42வது ரெசிஸ்ட்பிரிண்ட் சர்வதேச தடகளப் போட்டியில் 9.96 வினாடிகளில் போட்டியை முடித்தார்.

அவர் முடித்த நேரம் புதிய தெற்காசிய மற்றும் இலங்கை சாதனையாக அமைந்தது.

முன்னதாக அவர் சாதனை படைத்தபோது நேரம் 10.06 வினாடிகளாக பதிவு செய்யப்பட்டது.

யுபுன் அபேகோன் 100 மீற்றர் போட்டியை 10 வினாடிகளுக்குள் நிறைவு செய்த முதலாவது தெற்காசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.