சாதிச்சிட்டா மாறா…..
#CommonwealthGames2022
சமீபகாலமாக இலங்கை தடகள போட்டிகளில் உச்சரிக்கும் பெயர் யுபுன் அபேக்கூன் 2020 இல் இருந்து யுபுன் இன் பெயர் அதிகம் 100m 200m மற்றும் 60m போட்டிகளில் உச்சரிக்கப்படுகிறது.
இலங்கையில் இருந்து 2015 ஆம் ஆண்டு scholarship கிடைத்து Italy இல் குடியேறிய யுபுன், தற்போது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டியில் 100m இல் பங்குகொள்கிறார். 2019 இல் தெற்காசிய போட்டியில் 4× 100m relay team இல் பங்குகொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
அதன் பின்னர் 2020 இல் இருந்து அவர் வளர்ச்சி மின்னல் வேகம் என்றே கூறவேண்டும்.
2020 இல் 100m ஓட்டத்தை கடந்த நேரங்கள்:
29 / 8 இத்தாலியில் இடம்பெற்ற போட்டியில் 10:29
01 / 9 இல் இத்தாலியில் 10:32
08 / 9 இல் ஜெர்மனியில் 10:23
அன்றே இறுதி போட்டியில் 10: 16 என்னும் நேரத்தில் முடித்து sri lanaka record ஆக பதிவுசெய்யப்பட்டது
அதே போல் 2021 இல் வருட ஆரம்பம் முதல் இருந்தே performance ஐ டாப்புக் கொண்டுவரும் நோக்கில் செயற்பட்டு வந்துள்ளார்.
60 m
24/1 இத்தாலியில் 6.59 (sl record)
05/2 ஜேர்மனி இல் 6.65
09/2 பிரான்ஸில் 6.74
14/2 போலந்தில் 6.66 இல் பெறுபேறுகளை வழங்கி இருந்தார்.
அதே போல 100m இல்
13/03 இத்தாலியில் 10:12
21/05 ஜெர்மனியில் 10:09
10/06 இத்தாலியில் 10:16
என்னும் நேர பரிதியை வழங்கி இருந்தார்.
• வேகமான மனிதனாக தெற்காசியாவில் 100m போட்டியில் எந்த ஒரு நிலையிலும் 10.09 sec ஓடி முடித்ததில் இருந்து.
• தெற்காசிய 100m சாதனையாக 10.09 sec கருதப்பட்டுஇருந்த நேரத்தில் 3 july 2022 இல் இடம்பெற்ற 10 வினாடிகளுக்குள் 100m தூரத்தை கடந்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் முதல் வீரராக தன்னை 9.96 செக்கன்களில் ஓடி முடித்து புதிய தெற்காசிய 100m சாதனையை பதிவு செய்ததுடன் ஆசிய வீரர் ஒருவர் 100m தூரத்தை 10 செக்கன்களுக்குள் கடந்த 4ஆவது வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
இறுதியாக தற்போது இடம்பெற்று வருகின்ற காமன்வெல்த் போட்டியில் தடகள போட்டியில் ஆறாவது தெரிவு போட்டியில் 10.06செக் ஓடி முதலாவது இடம் பெற்று அரையிறுதி போட்டிக்கு தெரிவாகி யுபுன். மூன்றாவது அரையிறுதி போட்டியில் 10.20செக் ஓடி நான்காவது இடத்தில் வந்தாலும் இறுதிப்போட்டிக்கு பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது யுபுன் க்கு. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய யுபுன் இறுதி போட்டியில் 10.14 செக் களில் ஓடிமுடித்து காமன்வெல்த் போட்டியின் 100m நிகழ்வில் வெண்கல பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த வெண்கல பதக்கம் மூலம் இலங்கையர் ஒருவர் 100m போட்டியில் காமன்வெல்த் போட்டியில் பெற்ற முதல் பதக்கம் என்பதுடன் நான்காவது இலங்கையராக காமன்வெல்த் போட்டியில் தடகள போட்டியில் சுவட்டு நிகழ்வில் பதக்கம் பெற்றவராக தன்னை பதிவு செய்துள்ளார்.
(காமன்வெல்த் போட்டியில் சுவட்டு நிகழ்வில் பதக்கம் பெற்றவர்கள்
• டங்கன் வயிட் – 400yard தடைதண்டால் 1950 – ?
• ஶ்ரீயானி குலவன்ச – 100m தடைதாண்டல் 1998 – ?
• சுகத் திலகரட்ன – 400m 1998 – ?
#சந்துரு வரதராசன்