ரசலை தடுமாற வைத்த மிட்சேல் ஸ்ட்ராக்கின் இறுதி ஓவர் (முழுமையான வீடியோ)

ரசலை தடுமாற வைத்த மிட்சேல் ஸ்ட்ராக்கின் இறுதி ஓவர் (முழுமையான வீடியோ)

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்டதான டுவென்டி டுவென்டி தொடரின் 4வது போட்டி இன்று நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சு காரணமாக மிகச் சிறப்பாக 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை குவித்தது.

190 எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகளுக்கு இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.

அன்ரு ரசல் களத்தில் இருக்க ஸ்டார்க் வீசிய முதல் 5 பந்துகளிலும் ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்கவில்லை ,இறுதிப் பந்தில் மட்டும் சிக்சர் அடித்தார்.

அதுதொடர்பான முழுமையான வீடியோ..!