ரசிகர்களை கொள்ளை கொண்ட சீக்குகேயின் வித்தியாசமான டான்ஸ் ( வீடியோ இணைப்பு)
இலங்கையில் இடம்பெற்றுவரும் LPL போட்டிகளில் நேற்றைய நாளில் இடம்பெற்ற தீர்மானம் மிக்க கண்டி மற்றும் கொழும்பு அணிகளுக்கிடையிலான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி அபாரமான வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு சீக்குகே பிரசன்னவின் சிறந்த பந்துவீச்சு ஆற்றல் காரணமாக அமைந்தது, மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரவி போபராவை ஆட்டமிழக்கச் செய்தமை குறிப்பிடத்தக்கது .
அவரை ஆட்டமிழக்கச் செய்த பின்னர் சீக்குகே பிரசன்ன போட்ட ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகின்ற ஒரு செலிப்ரேஷன் ஆக மாறியிருக்கிறது, ஏற்கனவே 6 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசி அதிகம் பேசப்படும் சீக்குகே நேற்றைய போட்டியிலும் தன் ஆற்றலை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
36 வயதாகும் சீக்குகே பிரசன்ன இப்போது இலங்கை ரசிகர்களால் நோக்கப்படும் ஒரு வீரராக மாறியிருக்கிறார்.
வீடியோவை பாருங்கள் ??
Seekuge prasanna ?#LPL2021 #CSvsKW pic.twitter.com/WMN8BOsShr
— Stay Cricket (@staycricket) December 17, 2021