ரணதுங்கவிற்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்…!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை..!

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) செயற்குழு இன்று (ஆகஸ்ட் 15) கூடிய அவசரக் கூட்டத்தில் தேசிய விளையாட்டுப் பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு அர்ஜுன ரணதுங்க அண்மையில் ஊடகம் ஒன்றின் போது வெளியிட்ட பொய்யான, இழிவான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

SLC செயற்குழுவிற்கு எதிராக தவறான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, SLC இன் நல்லெண்ணம் மற்றும் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையில், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பேசி, வேண்டுமென்றே பகிரங்க கருத்துக்களை வெளியிட்ட அவருக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜுன ரணதுங்கவுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பி, பொய்யான மற்றும் இழிவான அறிக்கையின் மூலம் இலங்கை கிரிக்கெட் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நற்பெயர் இழப்புகளுக்கு 2 பில்லியன் நஷ்டஈடாக கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான உரிமம் இலங்கையிடம் இருந்தபோதும் அதனை நடத்தாமல், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வழங்கியதன் மூலம் SLC தவறிழைத்த்திருப்பதாக அர்ஜுன ரணதுங்க அண்மையில் கருத்து தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தேசிய விளையாட்டு பேரவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அர்ஜுன ரணதுங்கவின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் அர்ஜுனாவிற்கும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கும் இடையில் இவ்வாறு இழுபறியான நிலை காணப்படுகின்றமை விளையாட்டைப் பொறுத்த வரையில் ஆரோக்கியமற்றது எனவும் ரசிகர்கள் கருத்துப் பகிர்ந்துள்ளனர்.

 

 

 

 

 

 

Previous articleபாபர் அசாம் போல் கோலி ஒன்றும் சிறந்த வீரர் கிடையாது- முன்னாள் பாகிஸ்தான் வீரரது கருத்து…!
Next articleSLC Invitational தொடரின் சாம்பியனானது குசல் மென்டிஷின் ரெட்ஸ் அணி…!