பிரபல கால்பந்து கழகமான ஸ்பானிய கால்பந்தாட்ட கழகம் ரியல் மேட்ரிட் கழகம், பிரபலமான கால்பந்தாட்ட நட்சத்திரம் லூகா மோட்ரிச் உடனான தமது ஒப்பந்தத்தை ஒரு ஆண்டு காலத்திற்கு நீடிப்பதாக அறிவித்துள்ளது.
குரேஷிய தேசிய தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவரும் பிரபலமான ரியல் மேட்ரிட் கழகத்தின் மத்திய கள வீரருமான லூகா மோட்ரிச்சுடனான ஒப்பந்தத்தை 2022ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
35 வயதான லூகா மோட்ரிச், கடந்த முறை இடம்பெற்ற சர்வதேச கால்பந்து உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய குரேஷிய அணியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
35 வயதை எட்டிய காரணத்தால் இவருக்கான ஒப்பந்தத்தை ரியல் மேட்ரிட் நீடித்தாலும்,ஒப்பந்த காலம் ஓராண்டு மட்டுமே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.