ரிஷப் பண்டை வெளியேற்றி விட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தனது சிஷ்யனை களமிறக்கவுள்ள கம்பீர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் வெளியேறியதால் புதிய பயிற்சியாளர் நியமனம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்க கௌதம் கம்பீருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்திய அணிக்குள் பயிற்சியாளராக கம்பீர் வரும் வேளையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனியாக அவர் தேர்வு செய்ய இருக்கிறார் என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அவரது நிபந்தனைகளுக்கு பி.சி.சி.ஐ சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வேளையில் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் தாங்களாகவே முன்வந்து ஓய்வு அறிவித்தனர். இதன் காரணமாக டி20 அணியில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் முதல் மாற்றமாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனை கௌதம் கம்பீர் அணிக்குள் கொண்டு வர இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபித்தது கிடையாது. டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுவதால் டி20 கிரிக்கெட்டில் இருந்து பண்ட் வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே சஞ்சு சாம்சன் குறித்து பேசியுள்ள கம்பீர் கூறுகையில்
சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான வீரர். எந்த ஒரு வீரரையும் நான் சில நிமிடங்கள் பார்த்தாலே அவர் எப்படி விளையாடுவார் என்று சொல்லிவிடுவேன். அந்த வகையில் சஞ்சு சாம்சன் சிறப்பான பேட்ஸ்மேன் என்று ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக நிச்சயம் சாம்சனை அணிக்குள் கொண்டுவர அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.